ஓசூர் நகரில் சமீபகாலமாக சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. மேலும் நகரின் முக்கிய பகுதியிலேயே அவர்கள் சிறிதும் பயமின்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வதும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் ஹாரனை அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் அடித்து செல்வதும் பெருகிவிட்டது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராஜன், ஓசூர்.