கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமெட்டரை ஊராட்சி லிங்கனம்பட்டியில் துணை சுகாதார நிலையம் அரசு கட்டிடத்தில் உள்ளது. இங்கு செவிலியர்கள் மட்டும் உள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இல்லை இதனால் நோயாளிகள் மருத்துவம் பார்க்க ராயக்கோட்டை அல்லது உத்தனப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயராமன். லிங்கணம்பட்டி, கிருஷ்ணகிரி.