பூங்காவை பராமரிக்கலாமே!

Update: 2022-09-28 16:58 GMT

ஓசூர் தர்கா பகுதியில் டைட்டான் கம்பெனி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா உள்ளது. தற்போது அந்த பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. இதனால் இங்கு பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் இருப்பதால் குழந்தைகள் வர பயப்படுகிறார்கள். பூங்காவுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சிறுவர் பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-சண்முகவள்ளி, ஓசூர்.

மேலும் செய்திகள்