ஓசூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் செல்லும்போதும் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக துரத்தி செல்கின்றன. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-ஜி.ரமேஷ், காமராஜ் காலனி, ஓசூர்.