தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைரெயில்நிலையம் அருகே உள்ள பாரதிநகர்,அண்ணாநகர், ஆர்.வி.நகர் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் ஏராளமான நாய்கள் கூட்டம்,கூட்டமாக சுற்றி திரிகின்றன. பஸ் நிலையத்தில் கூட்டமாக செல்லும் நாய்கள் பயணிகளை விரட்டி சென்று கடித்து விடுகின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தனியாக செல்லும் சிறுவர்-சிறுமிகளை கடித்து குதறி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டை நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகன் , பட்டுக்கோட்டை