தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சித்திரைப்பட்டியில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதன் அருகே கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பாதுகாப்பு வளையங்கள் இல்லாமல் ஆபத்தாக உள்ளது. இப்பகுதியில் இளைஞர்களின் விளையாடும் கிணற்றில் அடிக்கடி விழுகிறது. விளையாட்டு மைதானத்தின் அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றுக்கு இரும்பு வேலி அமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-சதீஷ், மஞ்சாரஅள்ளி, தர்மபுரி.