மருங்கூர் சுற்றுவட்டார பகுதியில் இரவிபுதூர், குமாரபுரம் தோப்பூர், அமராவதிவிளை, ராமநாதிச்சன்புதூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஆனால் இந்த கிராமங்களில் ஒரு நூலகங்கள் கூட இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாசிப்பு திறன் குறைந்து வருகிறது. எனவே, பொதுமக்கள், இளம் தலைமுறையினர் நலன்கருதி மருங்கூர் பகுதியில் ஒரு நூலகம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.