தூர்ந்து கிடக்கும் கால்வாய்கள்

Update: 2026-01-04 18:57 GMT

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு 15-ந்தேதிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் உள்ள 40 ஏரிகளுக்கு இடதுபுற கால்வாய் வழியாக செல்கிறது. இதில் பிரதான கால்வாய் முதல் கிளை கால்வாய்கள் பெரும்பாலும், முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சதாகுப்பம் பகுதியில் தூர்ந்துபோய் இருக்கும் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

-சிவா, சாத்தனூர்.

மேலும் செய்திகள்