வாலாஜாவில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பிரதான தேசிய நெடுஞ்சாலைகளிலும் இரவு, பகல் என எந்நேரமும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. நகராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தாலும், மக்கள் கேட்பது இல்லை. மாடுகளை பிடித்து காஞ்சீபுரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், வாலாஜா.