பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

Update: 2026-01-04 18:54 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. பன்றி வளர்க்கும் நபர்கள், பன்றிகளுக்கு போதிய உணவு கொடுப்பதில்லை என்பதால் புதிய பஸ் நிலையம், பொட்டிநாயுடு தெரு, ஆரணி சாலை, கோட்டை மூலைப்பகுதி, காஞ்சீபுரம் சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு தேடி சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும்.

-கந்தன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்