விருத்தாசலம் ஒன்றியம் கச்சிராயநத்தம் பயணிகள் நிழற்குடையில் உள்ள இருக்கையை மதுப்பிரியர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.