வாலாஜா பஜாரில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பஸ் நிலைய முகப்பில் மணிக்கூண்டு உள்ளது. அங்கு 3 பக்கங்களில் பெரிய அளவில் கெடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கெடிகாரங்கள் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் பஸ் பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள் நேரத்தை தெரிந்து கொள்ள சிரமப்படுகின்றனர். அதில் உள்ள கெடிகார அலாரமும் பயனற்றுப் போய்விட்டது. உடனடியாக மணிக்கூண்டில் உள்ள கெடிகாரங்கள் செயல்பட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிதம்பரராஜன், வாலாஜா.