வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-01-04 18:35 GMT

திருச்சி மாவட்டம் நொச்சியம் பிச்சாண்டார் கோவில் பஸ் நிறுத்தம் முதல் நொச்சியம் புது பாலம் பஸ் நிறுத்தம் வரை சாலையோரத்தில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே போதிய அளவில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்