செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-14 11:12 GMT
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் எதிரே உள்ள மேம்பாலம் வழியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் பலர் சென்று வருகின்றனர். அவர்கள் காந்தி மைதானம் எதிரே உள்ள படிக்கட்டு மூலம் ஏறி மேம்பாலத்துக்கு செல்கின்றனர். ஆனால் அந்த படிக்கட்டை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் அங்கு இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால்  அந்த வழியாக செல்ல பெண்கள் தயங்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படிக்கட்டை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்