டிக்கெட் முன்பதிவு மையம் தேவை

Update: 2022-09-21 16:13 GMT

கிருஷ்ணகிரியில் அனைத்து முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. நகரைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிருஷ்ணகிரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர். மேலும், இம்மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெளியூர்களிலும் கல்வி பயின்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவதற்கும், இங்கிருந்து மீண்டும் செல்வதற்கும், அரசு விரைவு பஸ்சில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் அரசு விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் இதுவரை தொடங்கப்படவில்லை. டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரியப்பன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்