தடுப்புச்சுவர் அமைக்கலாமே?

Update: 2022-09-20 17:43 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கந்திகுப்பம் எலத்தகிரிக்கு செல்லும் சாலையில் உள்ள கந்திகுப்பம் ஏரி கரையின் இருபுறங்களிலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் ஏரியை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கவும், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-பிரபு, கந்திக்குப்பம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்