தஞ்சையில் பழைய இர்வீன்பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நிலையில் புது ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் புதிய பாலத்தின் அருகே தடுப்பு கம்பிகள் இல்லாமல் பாதுகாப்பும் இன்றி உள்ளது. இதனால் நடைபாதை பூங்காவில் செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை