கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் கிராமத்தில் சமுதாயக்கூடம் பாழடைந்து காணப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள ஏழை மக்கள் இந்த சமுதாயக்கூடத்தை சிறு, சிறு வீட்டு விசேஷங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.