கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா நாகமங்கலம் ஊராட்சி நாகமங்கலம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு சுமார் 1 வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூடிவைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மூடி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பெரியசாமி, நாகமங்கலம், கிருஷ்ணகிரி.