மயிலாடுதுறை மாவட்டம் , மணல் மேடு பேரூராட்சி நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறை உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறையை பராமரித்து மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.