கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து திருப்பத்தூர் கூட்ரோடு செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பஸ்கள் வந்தால் ஒதுங்க கூட இடம் கிடைப்பது இல்லை. எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.