கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இ சேவை மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மையம் அமைத்த நாளில் இருந்து இதுவரை செயல்படவில்லை. மேலும் அந்த பகுதி மக்களுக்கு இதுபோல் ஒரு சேவை மையம் இருப்பதாகவே தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் தனியார் கணினி மையத்தை தேடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த சேவை மையம் செயல்பட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடேஷ், கெங்கபிராம்பட்டி, கிருஷ்ணகிரி.