கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நகரத்தில் வேளாண்மை துறை அலுவலர்கள் தங்கி பணிபுரிய வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்த வீடுகள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்ததால் அலுவலர்கள் அதில் வசிக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே இந்த வீடுகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவபிரகாஷ், கிருஷ்ணகிரி.