கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சாலையில் சக்தி விநாயகர் கோவில் அருகே மரக்கிளை முறிந்து சாலையில் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த மரக்கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், ஓசூர்.