குடியிருப்பு பகுதிகளில் புதர்கள்

Update: 2022-09-11 15:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் புதர் செடிகள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த புதர் செடிகளை அகற்றி தூய்மைபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆகாஷ், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்