பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2022-09-10 16:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி புதிய பஸ் நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல வருடங்களுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது இந்த சுகாதார வளாகத்தை சுற்றியும் முட்புதர்கள் வளர்ந்து காடு போல காட்சி அளிக்கிறது. எனவே இந்த பொது சுகாதார வளாகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-பிரசாந்த், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்