செயல்படாத ஏ.டி.எம். மையங்கள்

Update: 2022-09-10 16:51 GMT

கிருஷ்ணகிரி டவுன் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம். மையங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அவசர காலங்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் சில ஏ.டி.எம். மையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே ஏ.டி.எம். மையங்களை முறையாக பராமரிக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரகுபதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்