நாகை பழைய பீச்சில் இரவு 7 மணிக்கு மேல் சில இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் பாட்டில்கள் மற்றும் பிளாஷ்டிக் கப்புகள் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழைய பீச்சை பகுதிக்கு பொதுமக்கள் பயமின்றி வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மது அருந்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை, சித்திக்