திருப்பூரில் தெருவுக்கு தெரு, சாலைக்கு சாலை குறைந்த பட்சம் 15 நாய்கள் நிற்கிறது. அவை சாலையின் குறுக்காக திடீரென்று ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது. தனியாக செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கிறது. கார்களையும் துரத்தும்போது காரின் சக்கத்தில் அவை சிக்கி விபத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரத்தில் தனியாக சென்றால் அதோ கதிதான். ஒவ்வொரு குப்பை தொட்டியிலும் இறைச்சி கழிவுகளை போடுவதால் அவற்றை தின்பதற்குநாய்கள் சண்டையிட்டு வீதியில் ஓடி, வாகனங்களை திக்குமுக்காட செய்கிறது. குறிப்பாக திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் மட்டும் மண்ணரை வரை 100 நாய்கள் நிற்கிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.