சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-09-08 16:14 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மலையாண்டஅள்ளி பாலேகுளி சாலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே மலையாண்டஅள்ளியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், மலையாண்டஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்