கிருஷ்ணகிரி அருகே உள்ள அகசிப்பள்ளி, தேவசமுதிரம் பஞ்சாயத்து பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. மழை காலங்களில் இந்த பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெளியில் வரமுடியாத சூழ்நிலை உருவாகிறது. மேலும் இந்த மழைநீருடன் சாக்கடைநீரும் கலந்து வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயன், தேவசமுதிரம், கிருஷ்ணகிரி.