கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-09-06 15:02 GMT


நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திட்டச்சேரி பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வேதாரண்யம்

மேலும் செய்திகள்