தெருநாய்கள் தொல்லை

Update: 2022-07-11 16:04 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலை, கே.சி.சி. நகர், பஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம், கூட்டமாக சுற்ற கூடிய நாய்கள் சாலைகளில் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல கூடிய இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. பலரும் நாய் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், பஸ்தி, ஓசூர்.

மேலும் செய்திகள்