கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி ஜம்புகான் ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 50-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் இந்த ஏரிக்குதான் வருகிறது. இந்தநிலையில் இதன் மதகு சேதமடைந்து மழைநீர் நிற்காமல் சனத்குமார் நதியில் கலந்து வீணாகிறது. ஏரியின் மதகை சரி செய்தால் சின்னட்டி, தாவரகரை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு தீர வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மதகை சீரமைத்து ஏரியில் மழைநீர் தேங்க செய்ய வேண்டும்.
-எஸ்.ராஜேஷ்குமார், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.