கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் அந்த அலுவலக கணினியில் அடிக்கடி சர்வர் பழுதாகிறது. இதனால் பொதுமக்கள் உரிய நேரத்தில் பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கேசவன், சூளகிரி, கிருஷ்ணகிரி.