ஊத்தங்கரை தாலுகா எக்கூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் திட்ட அலுவலக கட்டிடம் மாடுகள் கட்டும் கொட்டகையாக மாறி உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் அதிகமாக உள்ள இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-சாமிநாதன், எக்கூர், கிருஷ்ணகிரி.