வேதாரணயம் ஒன்றியத்திற்குட்பட்ட பிராந்தியங்கரை ஊராட்சிக்குட்பட்ட கண்ணெறிந்தான் கட்டளை கிராமத்தில் போக்கு வாய்க்காலில் அமைந்துள்ள மரப்பாலம் பழுதடைந்து உள்ளது. மேலும் ஆற்றில் முழுவதுமாக வெங்காயதாமரை மண்டி உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,வேதாரண்யம்.