நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
பொதுமக்கள், திருமருகல்