கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே புதூர்புங்கனை ஊராட்சியில் புங்கனை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது வீசிய காற்றில் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. மேற்கூறை இல்லாத அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் மழையில் நனைந்தபடி தங்கி இருப்பதால் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அங்கன்வாடி மையத்தை உடனடியாக சரி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்திபன், புங்கனை, கிருஷ்ணகிரி.