வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-28 14:01 GMT


கும்பகோணம் அருகே திருநறையூரிலிருந்து திருப்பந்துறை செல்லும் சாலையில் பெரியவாய்க்கால் உள்ளது. இதன் மூலம் திருநறையூர், சமத்தனார்குடி, திருப்பந்துறை விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இந்த நிலையில் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும் செய்திகள்