தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி எட்டியாம்பட்டி மயானத்திற்கு செல்லும் பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே மயானத்துக்கு வருபவர்கள் பயத்தோடு நிற்க வேண்டி இருக்கிறது. அங்குள்ள ஆழ்துளை கிணறு அடிபம்பும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து முட்புதர்களை அகற்றி மயானத்தை பயன்படுத்துவதற்கு ஏற்ற முறையில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தராசு, பாப்பாரப்பட்டி, தர்மபுரி.