ஆபத்தான மின்கம்பிகள்

Update: 2022-08-27 14:01 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி-நாகூர் சாலையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அருகில் உள்ள மூங்கில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் சாய்ந்து உள்ளன. இதன் காரணமாக மின் கசிவு ஏற்படுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை தாழ்வாக ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்