கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2022-08-25 15:45 GMT


நாகையில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்லும் அரசு பஸ் தினமும் மூன்று முறை சென்று வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி விடும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் இந்த பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்