தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-25 15:16 GMT

தர்மபுரி நகரில் தெருநாய்கள் ெதால்லை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்கள் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையின் குறுக்கே ஓடுவதால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டுரங்கன், தர்மபுரி.

மேலும் செய்திகள்