கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் தெருநாய்கள் திடீரென்று ஆங்காங்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
மன்னாங்கட்டி, மத்தூர், கிருஷ்ணகிரி.