ஆபத்தான மரம்

Update: 2022-08-23 17:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எலசேபள்ளி பிரிவு சாலையில் சாலையோரம் பழமையான மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் எந்த நேரத்திலும் முறிந்துவிழும் அபாயத்தில் காணப்படுகிறது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் முன், உடனடியாக அந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.வி.சீனிவாசன், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்