தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பஸ் நிலையம் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் கழிவறைகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் கழிவறைகள் அமைக்க வேண்டும்.
மணி, பென்னாகரம், தர்மபுரி.