ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையோரம் மத்திய கலால் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே தற்போது மாநகராட்சி சார்பில் பூங்கா, குறுங்காடு அமைக்கும் பணிக்காக சாலையை ஆக்கிரமித்து இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் சாலை குறுகி உள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையின் அகலம் குறையாமல் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த், ஓசூர், கிருஷ்ணகிரி.