
வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவிலில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் தினமும் இரவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயின் ஒருபகுதி மூடும் அளவுக்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றவும், மேற்கொண்டு குப்பைக்கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜவகர், வேலூர்.