கரூர் அரசு காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து சேகரமாகும் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.